ஆரோக்கியம்

உயிர்களைக் காப்பாற்றுங்கள், மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கொரோனா வைரஸ்’-இன் பரவலைக் குறைக்க உதவுங்கள்

வீட்டில் இருங்கள்

 • அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்.
 • அத்தியாவசியம் இல்லாத நடவடிக்கைகளுக்காக வீட்டை விட்டு வெளியே போவதைத் தவிருங்கள்.
 • குடும்பத்தினர் அல்லது நண்பர்களை உங்கள் வீட்டிற்குள் அழைக்காதீர்கள்.
 • பின் வரும் தருணங்களைத் தவிர மற்ற நேரத்தில் வீட்டிற்குள் இருங்கள்:
  • வேலைக்கு அல்லது படிக்கச் செல்லுதல் (வீட்டிற்குள் செய்ய இயலாமல் இருந்தால்)
  • மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லுதல் (தாமதமின்றி வீட்டிற்குத் திரும்புங்கள்)
  • நீங்கள் தனியாகவோ, மற்ற ஒரு நபருடனோ உடற்பயிற்சிக்காக உங்களுடைய அயல்புறத்திற்குச் செல்லுதல்
  • மருத்துவ சந்திப்புகளுக்குச் செல்லுதல் அல்லது கருணை அடிப்படையில் மற்றவர்களைப் பார்க்கச் செல்லுதல்.
 • மருத்துவ சேவைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், அஞ்சல் மற்றும் ‘ஹோம் டெலிவெரி’ சேவைகள் ஆகியன திறந்திருக்கும்.

பாதுகாப்பாக இருங்கள்

 • அனைத்துவேளைகளிலும் நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடியுங்கள், சோப்பு மற்றும் தண்ணீரைப் பாவித்துக் குறைந்தபட்சம் 20 நொடி நேரத்திற்கு உங்கள் கைகளைக் கழுவுங்கள், இருமல்களை மூடுங்கள், கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிருங்கள்.
 • வீட்டிற்கு வெளியே இருக்கும்போது குறைந்தபட்சமாக 1. 5 மீட்டர் இடைவெளியுள்ள ‘சமுக விலக’லைப் பின்பற்றுங்கள்.
 • கை குலுக்கல், அணைப்புகள் மற்றும் முத்தங்கள் போன்ற உடல்ரீதியான சமூக வரவேற்புப் பழக்கங்களைத் தவிருங்கள்.
 • பணமாகத் தராமல், கார்டு (tap and go) மூலமாகப் பணம் செலுத்துங்கள்.
 • அமைதியான நேரங்களில் பயணம் செய்யுங்கள் மற்றும் கூட்டங்களைத் தவிருங்கள்.
 • சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள் - நம்பிக்கைக்குரிய அதிகாரபூர்வமான தகவல்களை மட்டுமே பாவியுங்கள். மிகச் சமீபத்திய தகவல்களுக்கு ‘கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா மொபைல் ஃபோன் ஆப்’ (Coronovirus Australia mobile phone app)-ஐ வலையிறக்கம் செய்யுங்கள், ‘கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா வாட்ஸ்-ஆப்’ (Coronovirus Australia WhatsApp service) சேவையைப் பெறுங்கள், மற்றும் www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

தொடர்பில் இருங்கள்

 • இணையம் அல்லது தொலைபேசி மூலமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள்.
 • வயதான உறவினர்களுக்கும், பாதிப்பு அடையும் நிலையில் உள்ளவர்களுக்கும் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை அவர்களுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று சேருங்கள். பொருட்களை அவர்களுடைய வீட்டு வாசற்படியில் வையுங்கள்.
 • சேவைகளுக்கான தேவை அதிகம் உள்ளவர்களுக்கு முக்கியமான சுயவிருப்புத் தொண்டு அமைப்புக்களும், தரும ஸ்தாபனங்களும் தொடர்ந்து சேவைகளை அளித்துவரக்கூடும்.

சுகாதாரத் தகவல்கள்

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகளில் உள்ளடங்குவன:

 • சுரம்
 • இருமல்
 • தொண்டை நோவு
 • களைப்பு
 • மூச்சு வாங்கல்

நீங்கள் சுகவீனமாக இருந்து, உங்களுக்குக் ‘கொரோனோ வைரஸ்’ தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், மருத்துவ உதவியை நாடுங்கள்.

இதைப் பற்றிய தகவல்களுக்கு ‘தேசிய கொரோனா வைரஸ் உதவி இணைப்’(National Coronavirus Helpline)பினை நீங்கள் அழைக்கலாம். மொழிபெயர்ப்பு அல்லது மொழிபெயர்த்துரைப்பு சேவைகள் தேவைப்பட்டல், 131 450 -ஐ நீங்கள் அழைக்கலாம்.

சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாரதூரமான நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவிக்காக ‘000’-வை அழையுங்கள்.

பாதுகாப்பாக இருப்பதற்கும், சமூகத்தினருக்கு ஏற்படும் ஆபத்துகளை மட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உதவுவதற்காக ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் உள்ள பல வகையான தகவல்கள் ‘சுகாதார திணைக்கள’த்தின் வலைத்தளத்தில் உள்ளன. 

உண்மைத் தாள்கள்