சுகாதாரம்

உடல்நலம் குறித்த தகவல்கள்

சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாரதூரமான நோயறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவிக்கு 000 -வை அழையுங்கள்.

‘கோரோனா வைரஸ்’ தொற்றின் அறிகுறிகளில் உள்ளடங்குவன:

 • சுரம்
 • இருமல்
 • தொண்டை வலி
 • மூச்சு வாங்கல்

நாசிக் கசிவு, தலைவலி, தசை அல்லது மூட்டு வலிகள், குமட்டல், வயிற்றுப்போக்கு, வாசனைத் திறன் இழப்பு, மாறிய சுவைத் திறன், பசியின்மை மற்றும் களைப்பு ஆகியன மற்ற நோயறிகுறிகளில் உள்ளடங்கக் கூடும்.

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து, உங்களுக்குக் ;கொரோனா வைரஸ்’ தொற்று இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைத்தால், மருத்துவ உதவியை நாடுங்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு, 1800 020 080 -இல் ‘தேசிய ‘கொரோனா வைரஸ்’ உதவி இணைப்’(National Coronavirus Helpline)பினை நீங்கள் அழைக்கலாம். உங்களுடைய மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரது உதவி வேண்டுமெனில், தயவு செய்து 131 450 -ஐ அழையுங்கள்.

பாதுகாப்பாக இருப்பதற்கும், சமூகத்தினருக்கான ஆபத்துகளை மட்டுப்படுத்துவதற்கும் சனங்களுக்கு உதவுவதற்கான தகவல்கள் ‘சுகாதார திணைக்கள’(Department of Health’s website )த்தின் வலைத்தலத்தில் ‘ஆங்கிலம் அல்லாத வேறு மொழிக’(languages other than English)ளில் கிடைக்கும். 

வேறு மொழிகளிலுள்ள மேலதிக மூலவளங்களை www.sbs.com.au/language/coronavirus எனும் வலைத்தலப் பக்கத்தில் காணலாம்.

‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனை மற்றும் சிகிச்சை

உங்களுக்கு விசா ஒன்று இல்லை என்றால், அல்லது உங்களுடைய விசா நிலவரத்தைப் பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால் பொது சுகாதாரம் குறித்த அறிவுறுத்தல்களை நீங்கள் பின்பற்றவேண்டியது கட்டாயம். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அல்லது உங்களுக்கு இந்த நோயறிகுறிகள் இருந்தால், அவை எவ்வளவுதான் மிதமானவையாக இருந்தாலும், நீங்கள் மருத்துவ கவனிப்பை நாடவேண்டும், மற்றும் ‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு மிக அண்மையிலுள்ள ‘‘கோவிட்-19’ சுவாசநோய் சிகிச்சையகம்’ (COVID-19 respiratory clinic) எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாதுகாப்பாக இருங்கள்

 • நல்ல சுகாதாரப் பழக்கங்களை எப்போதும் பின்பற்றுங்கள், சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்திக் குறைந்தபட்சமாக 20 நொடி நேரத்திற்கு உங்களுடைய கைகளைக் கழுவிக்கொண்டிருங்கள், உங்களுடைய இருமல்களை மறைத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய கண்கள், நாசி மற்றும் வாயைத் தொடுவதைத் தவிருங்கள்.
 • உங்களுடைய வீட்டிற்கு வெளியே இருக்கும்போது குறைந்தபட்சமாக 1.5 மீட்டர் தூர இடைவெளியிலான சமூக விலகலைப் பின்பற்றுங்கள்.
 • கைகுலுக்கல்கள், அணைப்புகள் மற்றும் முத்தங்கள் போன்ற உடல்ரீதியான முகமன்கூறல்களைத் தவிருங்கள்.
 • நீங்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திவந்தால், மேலதிக முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
 • சன நெரிசல்கள், பெரிய பொதுமக்கள் கூட்டங்கள் ஆகியவற்றைத் தவிருங்கள்.
 • இதைப் பற்றிய விபரங்களை நன்கு தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள் – நம்பிக்கைக்குறிய அதிகாரபூர்வமான தகவல்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ‘‘கொரோனா வைரஸ்’ ஆஸ்திரேலியா’ (Coronavirus Australia) எனும் ‘கைப்பேசி செயலி’ (mobile phone app)-யை இறக்கம் செய்துகொள்ளுஙகள், மற்றும் ‘‘கொரோனா வைரஸ்’ ஆஸ்திரேலியா வாட்ஸ்-ஆப் சேவை’ (Coronavirus Australia WhatsApp service)-க்கு சந்தாதாரராக ஆகுங்கள், அல்லது மிகச் சமீபத்திய தகவல்களுக்கு www.australia.gov.au  எனும் வலைதலத்திற்குச் செல்லுங்கள்.

‘வயதானோருக்கான ‘கோவிட்-19’ ஆதரவுதவி இணைப்பு’ (Older Persons COVID-19 Support Line)

‘வயதானோருக்கான ‘கோவிட்-19’ ஆதரவுதவி இணைப்பு’ எனும் வசதியானது வயதான ஆஸ்திரேலியர்களுக்கான தகவல்களையும், ஆதரவுதவியையும் அளித்து அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது.

சில வயதானவர்களுக்கு ‘கோவிட்-19’ தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கும், ஆனால் அவர்களுக்கு இணையத்தைப் பயன்படுத்தும் வசதி குறைவாக இருக்கும், மற்றும் அவர்களுடைய சூழலுக்கேற்ற தகவல்களைப் பெறுவதற்கான வழிகள் அவர்களுக்குத் தேவைப்படும். ‘வயதானோருக்கான ‘கோவிட்-19’ ஆதரவுதவி இணைப்பு’ (The Older Persons COVID-19 Support Line) எனும் சேவை தகவல்களையும் ஆதரவுதவியையும் அளிக்கிறது.

வயதான ஆஸ்திரேலியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோர் பின் வரும் தருணங்களில் 1800 171 866  எனும் இலக்கத்தினை இலவசமாக அழைக்கலாம்:

 • ‘கோவிட்-19’ குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் அவர்கள் மீது இது ஏற்படுத்து தாக்கம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக யாருடனாவது பேச விரும்பினால்
 • தனித்துவிட்டதாக நினைத்தால், மற்றும் அன்பிற்குரிய ஒருவரைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்
 • தகவல்கள் சிலவற்றைப் பெற வேண்டிய தேவையில் இருக்கும், அல்லது யாராவதொருவருடன் பேச விரும்பும் ஒருவரைப் பராமரித்துவந்தால்
 • தாம் பெற்றுக்கொண்டிருக்கும் முதியோர் பராமரிப்பு சேவைகளை மாற்றிக்கொள்வதற்காக உதவி அல்லது அறிவுரை தேவைப்பட்டால்
 • புதிய பராமரிப்பு சேவைகளை அணுகிப் பெறுவது அல்லது அத்தியாவசியமான பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்வது போன்றவற்றில் உதவி தேவைப்பட்டால்
 • தம்மைப் பற்றி, அல்லது மறதிநோயோடு வாழ்ந்துவரும் நண்பர் அல்லது குடும்ப அங்கத்தவர் ஒருவரைப் பற்றிய கவலைகள் இருந்தால்
 • தமக்கோ அல்லது வேறொருவருக்கோ ஒரு-முறை மட்டும் செய்யப்படும், அல்லது அவ்வப்போது தவறாமல் செய்யப்படும் பொதுவான உடல்நலப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால்.

வயதான ஆஸ்திரேலியர்கள், அவர்களுடைய உறவினர்கள், பராமரிப்பாளர்கள், நண்பர்கள் அல்லது ஆதரவுதவியாளர்கள் ஆகியோர் அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய எவ்வொரு  தகவல் அல்லது சேவைகளுக்காகவும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை (ஆஸ்திரேலியக் கிழக்கு நேரம் (AEST)), அலுவல் நாட்களில் 1800 171 866  எனும் இலக்கத்தினை அழைக்கலாம்.

தகவல் ஏடுகள்