COVID-19 தடுப்பூசிகள்

தடுப்பூசிகளை இட்டுக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய சமூகங்களில் வாழும் ஒவ்வொருவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது சுகாதார அறிவுரைப்படியானதாகும்.

பின் வருவோர் உள்ளடங்க, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசிகள்

இலவசம்:

  • ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள்
  • வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள்
  • சர்வதேச மாணவ-மாணவிகள்
  • புலம்-பெயர்த் தொழிலாளர்கள்
  • அடைக்கலம் நாடிக்கொண்டிருப்பவர்கள், மற்றும்
  • செல்லுபடியாகும் விசா ஒன்று இல்லாதவர்கள்.

ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் தடுப்பூசிகளை இட்டுக்கொள்ளும் பொழுது அவர்களுடைய குடிவரவு அல்லது குடியுரிமை நிலையைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை.

இலவச COVID-19 தடுப்பூசி மருந்தினைப் பெற Medicare வசதிக்குத் தகுதி பெறவேண்டிய தேவை, அல்லது அதில் பதிவு பெற்றிருக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. Medicare அட்டை ஒன்று உங்களுக்குத் தேவைப்படாத சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிய COVID-19 Vaccine Eligibility Checker-ஐப் பயன்படுத்துங்கள்.

COVID-19 தடுப்பூசியளிப்புத் திட்டத்தைப் பற்றி உங்கள் மொழியில் உள்ள தகவல்களுக்கு COVID-19 vaccine information in your language-இற்குச் செல்லுங்கள்.

தகவல் ஏடுகள்