தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக

வாடகைதாரர் வெளியேற்றல்கள் இருக்காது

அனைத்து மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுகளாலும் வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவது ஆறு மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்படும். குறுகியகால ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசுமாறு வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலதிகத் தகவல்களுக்கு உங்களுடைய மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுடன் தொடர்புகொள்ளுங்கள்.

ஓய்வு பெற்றவர்களுக்கானக் குறைந்தபட்ச ‘பணம்-எடுப்பு’ (drawdown) வீதம் குறித்த தெரிவுகள்

‘கோவிட்-19’ பெருந்தொற்றின் காரணமாக நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட கணிசமான இழப்புகளை மிதப்படுத்துவதில் உதவுவதற்காக 2019-20 மற்றும் 2020-21 நிதி ஆண்டுகளுக்காக, ‘சூப்பர்’-இல் இருந்து உருட்டப்பட்டப் பணம் உள்ள கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஓய்வூதியங்கள் மற்றும்  இது போன்ற மற்ற திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கானக் குறைந்தபட்சத் தேவைகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/drawdown எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு

அரசாங்கத்தின் ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு என்பது, ‘கொரோனா வைரஸ்’ (‘கோவிட்-19’)-இனால் கணிசமான அளவிற்குப் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கான தற்காலிக உதவித்தொகையாகும்.

தகுதி பெறும் வேலை தரும் முதலாளிகளும், தனி வர்த்தகர்களும் மற்ற அமைப்புகளும் அவர்களது தகுதிபெறும் தொழிலாளர்களுக்காக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவைப் பெறுவதற்காக விண்ணப்பிக்க இயலுமாக இருந்தது. இந்தக் கொடுப்பனவு முதலாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாக்கித் தொகைகளாக ATO -இனால் கொடுக்கப்பட்டது.

நீங்கள் ஒரு ஒற்றை வர்த்தகர் என்றால், ‘மை-கொவ்’ (myGov)-ஐப் பயன்படுத்தி, ATO-வின் இணைய சேவைகளில் ‘ATO-வின் வர்த்தகர் மேடை’ (ATO's Business Portal) மூலமாக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளுக்காக பதிவு செய்துகொள்ள இயலுமாக இருந்தது, அல்லது வர்த்தகங்கள் பதிவு பெற்ற ஒரு வரி முகவர் அல்லது BAS முகவர் மூலமாக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளுக்காகப் பதிவு செய்துகொள்ள இயலுமாக இருந்தது.

‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/JobKeeper எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

‘புதிய பணியமர்த்து நிதியுதவி’ (JobMaker Hiring Credit)

‘புதிய பணியமர்த்து நிதியுதவி’ (JobMaker Hiring Credit) என்பது 16 – 35 வயது வரைக்கும் உள்ள இள-வயது வேலை-தேடிகளைக் கூடுதலாகப் பணியமர்த்துவதற்காக  வர்த்தகங்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கான ஒரு திட்டமாகும்.

தகுதி பெறும் பணியமர்த்தும் முதலாளிகள், 7 அக்டோபர் 2020 மற்றும் 6 அக்டோபர் 2021 -இற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பணியமர்த்தும் ஒவ்வொரு தகுதியுள்ள கூடுதல் தொழிலாளருக்குமென ‘ஜாப்-மேக்கர் ஹைரிங்க் க்ரெடிட்’ கொடுப்பனவுகளை அணுகலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/jobmakerhiringcredit எனும் வலைத்தலப் பக்கத்தினைப் பாருங்கள்.

அரச முறைமையைப் பாதுகாப்பானதாகவும் நியாமானதாவும் வைத்திருத்தல்

உங்களிடமிருந்து தந்திரமாகம் பணம் கறப்பதற்காக அல்லது உங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக முயற்சிக்கும் மோசடிக் காரியங்களைக் குறித்து அவதானமாக இருங்கள்.

‘அஸ்திரேலிய வரியிறுப்பு அலுவலகம்’ (ATO) போன்ற நம்பிக்கைக்குரிய அமைப்புகளில் இருந்து பேசுவதாக மோசடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சொல்வார்கள். எப்போதும் ATO -வுடன் நீங்கள் கொள்ளும் தொடர்பாடல்கள் உண்மையானவைதானா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், பதில் அளிக்காதீர்கள். ‘ATO மோசடித் தடுப்பு உதவி இணைப்’(ATO Scam Hotline)பினை நீங்கள் 1800 008 540 எனும் இலக்கத்தில் அழைக்கலாம், அல்லது மேலதிகத் தகவல்களுக்காக www.ato.gov.au/scams  எனும் வலைத்தலத்திற்குச் செல்லலாம்.

அரசாங்கக் கொடுப்பனவுகளும் சேவைகளும்

நீங்கள் ஏற்கனவே ‘செண்ட்டர்லிங்க்’ கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுவராவிட்டால், ‘சர்வீஸஸ் ஆஸ்திரேலியா’வினால் பண ரீரியாக உங்களுக்கு உதவ இயலும். சேவை மையம் ஒன்றிற்கு நீங்கள் செல்ல வேண்டிய தேவை இல்லை. எமது சுய-சேவைத் தெரிவுகளை நீங்கள் பயன்படுத்தலாம். சமூக சேவகர் ஒருவரையும் நீங்கள் பெறலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு சேவைபெறுநராக இருந்தால், ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’ காரணமாக எமது கொடுப்பனவுகளிலும் சேவைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  பல மொழிகளில் கிடைக்கும் மேலதிகத் தகவல்களுக்கு servicesaustralia.gov.au/covid19 எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.