வர்த்தகங்களுக்கு

‘ஜாப்-கீப்பர்’ நீட்டிப்பு

27 செப்டம்பர் 2020 வரைக்கும் நீடிப்பதாக இருந்த ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு தகுதிபெறும் வர்த்தகங்களுக்கும் (சுய தொழில்கள் உள்ளடங்க), இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கும் 28 மார்ச் 2021 வரை தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும்.

வரவிருக்கும் மாற்றங்களைப் பற்றிய சாராம்சம் ஒன்றைக் காண treasury.gov.au/coronavirus/jobkeeper/extension எனும் வலைத்தலப் பக்கத்தினைப் பாருங்கள்.

‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு

கொடுப்பனவு’ திட்டமானது ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-இன் காரணமாகக் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்குக் கிடைக்கும் தற்காலிக உதவித்தொகையாகும்.

தகுதி பெறும் முதலாளிகள், தனி-வர்த்தகர்கள், மேலும் மற்ற நிறுவனங்கள் ஆகியோர் தகுதி பெறும் அவர்களது தொழிலாளர்களுக்காக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளைப் பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் ATO -வினால் இது பாக்கித்தொகைகளாக முதலாளிக்குக் கொடுக்கப்படும். 

வர்த்தகங்களானவை ATO's Business Portal வாயிலாக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளுக்காகப் பதிவு செய்துகொள்ளலாம், நீங்கள் ஒரு தனி வர்த்தகரானால் myGov -ஐப் பயன்படுத்தி ATO online services எனும் இணையவழிச் சேவைகள் மூலமாக அல்லது பதிவுபெற்ற ஒரு வரிக் கணக்கு முகவர் அல்லது BAS முகவர் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போது ATO-விடமிருந்து கிடைக்கும் ‘ஜாப்-கீப்பர்’ ஆதரவுதவி மற்றும் ஒத்தாசையைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/JobKeeper எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

கட்டணங்களைச் செலுத்தவும், சம்பளங்களைக் கொடுப்பதற்குமான பண ஓட்டம் இருப்பதை உறுதிப்படுத்துதல்

மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரைக்குமான மாதாந்திர மற்றும் கால்-ஆண்டு ‘வர்த்தக நடவடிக்கை அறிக்கைக’(activity statements)ளைத் தாக்கல் செய்வதன் மூலம் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள தகுதி பெறும் வர்த்தகங்களும், இலாப நோக்கற்ற அமைப்புக(NFP)ளும் $20,000 முதல் $100,000 வரைக்கும் ‘பண ஓட்ட செயலூக்க’(cash flow boost)த் தொகைகளாகப் பெறுவர். 

மேலதிகமாகத் தெரிந்துகொள்ள:

தொழில் பழகுனர்கள் மற்றும் பயிற்சியர்கள்

ஆஸ்திரேலியாவின் திறனடிப்படைத் தொழிலாளர் படையின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவுதவி அளித்துவருகிறது, மற்றும் தொழில் பழகுனர்களையும் பயிற்சியாளர்களையும் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தகுதி பெறும் வர்த்தகங்களுக்கு $21,000 வரைக்குமான 50 சதவீத சம்பள உதவித்தொகையை அளிக்கிறது.

மேலதிகமாகத் தெரிந்துகொள்ள:

கடன்கள்

‘கொரோனா வைரஸ் உத்திரவாதத் திட்டம்’ (Coronavirus SME Guarantee Scheme) என்ற புதிய திட்டமானது வரவிருக்கும் மாதங்களில் உங்களுக்கு உதவுவதற்காக இத் திட்டத்தில் பங்குபற்றும் கடன்வழங்குவோரிடம் இருந்து கூடுதல் கடன்களை உங்களால் பெற இயலும் என்பதைக் குறிக்கிறது.

பாதுகாப்பு இல்லாதப் புதிய கடன்களுக்காகப் பயன்படுத்துவதற்கென SME கடன்வழங்குவோருக்கு 50 சதவீத உத்திரவாதத்தை தொழிலுக்கான முதலாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கம் கொடுக்கும்.

தற்போதுள்ள சிறு வர்த்தக வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குபவர்களுக்கானக் கடன்வழங்குக் கடப்பாட்டுப் பொறுப்புகளில் இருந்து விலக்கையும் அரசாங்கம் அவர்களுக்கு அளிக்கிறது.

இந்த விலக்கு ஆறு மாத காலத்திற்கானது, மற்றும் புதிய கடன்கள், கடன் வரையறை அதிகரிப்புகள், கடன்களில் செயப்படும் மாறுபாடுகள் மற்றும் மீளமைப்புகள் ஆகியன உள்ளடங்க வர்த்தக நோக்கங்களுக்கான எந்தக் கடன்களுக்கும் இது பொருந்தும்.

மண்டலங்கள் மற்றும் துறைகளுக்கு ஆதரவுதவியளித்தல் கோரோனா வைரஸ் நோய்வெடிப்பினால் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், மண்டலங்கள் மற்றும் தொழில்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. நோய்ப்பரவல் காலத்திலும், மீண்டும் பழைய நிலைக்கு மீண்டுவரும் காலத்திலும் உதவுவதற்காக இந்த நிதிகள் கிடைக்கும். கூடுதலாக, 715 மில்லியன் டாலர்கள் வரைக்குமான திட்டத்தின் ஊடாக நமது விமானப் போக்குவரத்துத் துறைக்கு அரசாங்கம் உதவி வருகிறது.

உங்களுடைய வர்த்தகத்தில் முதலீடு செய்தல் வருடாந்த ஒட்டுமொத்தப் பணப்புரள்வு 500 மில்லியன் டாலர்களுக்குக் குறைவாக உள்ள வர்த்தகளுக்கான கடன் தள்ளுபடி எல்லையானது 30,000 டாலர்களில் இருந்து 150,000 டாலர்கள் வரைக்கும் உயர்தப்பட்டுள்ளது. 

உங்களுடைய கிடங்கிற்காகப் புதிய சாதனங்களை நீங்கள் வாங்கினாலும், அல்லது இரண்டாம்-கை டிராக்டர் ஒன்றை வாங்கினாலும், அதிகரிப்பும் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ள உடனடி சொத்துத் தள்ளுபடியிலிருந்து 31 டிசம்பர் 2020 வரை நீங்கள் ஆதாயம் பெறக்கூடும்.

வர்த்தகங்களுக்கு ஆதரவுதவியாக இருப்பதற்காக ‘ஜாப்-மேக்கர் திட்ட’த்தின் தற்காலிக நடவடிக்கைகள்

2020-21-ஆம் ஆண்டினது வரவு-செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘கோரோனா வைரஸ் (‘கோவிட்-19’) பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக வர்த்தகங்களுக்கு உதவ அரசாங்கம் அனேக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திவருகிறது.

இந்த நடவடிக்கைகளானவை, வரிக் கணக்கிற்கான நேரம் வரும்போது வரிச் சலுகைகள், கழிப்புத்தொகைகள் மற்றும் சொத்துக்களின் மதிப்பிழப்பு ஆகியவற்றிற்கான கோரிக்கை விடுத்தல் சம்பந்தப்பட்டவையாகும். 2020-21 மற்றும் 2021-22 -ஆம் நிதியாண்டுகளில் ‘கோவிட்-19’-இன் பொருளாதாரத் தாக்கங்களின் ஊடாக வர்த்தகங்களுக்கு இவை ஆதரவுதவி அளிக்கும்.

இந்த நடவடிக்கைகளில் உள்ளடங்குவன:

  • ‘புதிய பணியமர்த்து நிதியுதவி’ (JobMaker Hiring Credit)
  • ‘தற்காலிக முழு செலவுத் தள்ளுபடி (Temporary full expensing)
  • ‘இழப்புப் பின் ஈடு’ (Loss carry back)
  • வர்த்தக முதலீட்டு உதவி – சொத்து மதிப்பிழப்பில் அதிகரிப்பு (Backing business investment – accelerated depreciation)
  • உடனடி சொத்து-மதிப்புக் கழிப்பு (Instant asset write-off)
  • சிறு வர்த்தக பணப்-புரள்வு எல்லையில் அதிகரிப்பு (Increasing the small business entity turnover threshold)

மேலதிகத் தகவல்களுக்கு ato.gov.au/JobMakermeasures எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.